Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பார்க்க பார்க்க…சாப்பிட தோணும்…கைமா புட்டு ரெசிபி…!!

கைமா புட்டு செய்ய தேவையான பொருட்கள்:

கொத்துக்கறி                – 200 கிராம்
மிளகாய் பொடி           – ஒரு தேக்கரண்டி
வெங்காயம்                   – 100 கிராம்
இஞ்சி                                 – 15 கிராம்
பூண்டு                               – 30 பல்
நெய்                                    – 20 கிராம்
பட்டை                                – 4
கிராம்பு                             – 4
ஏலக்காய்                         – ரெண்டு
முந்திரிப்பருப்பு            – 2
முட்டை                               – 2
மிளகாய்                             – 3
மல்லி இலை                     –  ஒரு கைப்பிடி
மஞ்சள் பொடி உப்பு     – தேவையான அளவு

செய்முறை:

கறியுடன் மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், அரைத்த இஞ்சிப்பூண்டு, மஞ்சள்த்தூள், உப்பு, மிளகாய்த்தூள் போட்டு வேக வைக்கவும். தண்ணீர் வற்றியதும் அம்மியில் வைத்து கரகரப்பாக அரைக்கவும்.

சட்டியில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து, அதனுடன் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி மேலும் நன்றாக கிளறிவிடவும்.

கறி வறுபட்டதும் வறுத்த முந்திரிப் பருப்பு, மல்லி இலை போட்டு கிளறி இறக்கவும். இப்போது சுவையான கைமா புட்டு ரெடி.

குறிப்பு:

கொத்துக்கறிக்குப் பதில் கூறி மீனை போட்டும் புட்டு தயாரிக்கலாம். சுவை அருமையாக இருக்கும்.

Categories

Tech |