தமிழகத்தில் கைரேகை இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு 2500 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகையாக இலவச வேஷ்டி சேலை விலை ரூ 2,500 ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான தோசன் விநியோகம் இன்று முதல் தமிழகத்தில் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதிலும் டிசம்பர் 30-ஆம் தேதி டோக்கன் விநியோகம் நடைபெறும். அதன்பிறகு ஜனவரி 4 ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்கப்படும்.
இந்நிலையில் கைரேகை இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள பல ரேஷன் கடைகளின் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவாகவில்லை என புகார் எழுந்துள்ளது. அதனால் இந்த அதிரடி அறிவிப்பை உணவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.