கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மல்யுத்த வீரர் சுஷில் குமார் வடக்கு ரயில்வே முதுநிலை வர்த்தக மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
டெல்லியில் கடந்த 4 ம் தேதி ஏற்பட்ட தகராறில், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற வீரர் சுஷில் குமாரும் ,அவருடைய நண்பர்களும் சேர்ந்து சக மல்யுத்த வீரரான சாகர் ராணாவை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சாகர் ராணா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சுஷில்குமார் நேற்று முன்தினம் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சுஷில்குமார் மீதான கொலை வழக்கு குறித்த அறிக்கையை ,நேற்று ரயில்வே வாரியத்துக்கு டெல்லி அரசு அனுப்பியுள்ளது. இதனால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்று , வடக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் நேற்று தெரிவித்துள்ளார். அவர் பணி இடை நீக்கம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு இன்னும் ஓரிரு நாட்களில் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.