Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாடி கதவை உடைத்து…. கைவரிசை காட்டிய மர்மநபர்…. போலீஸ் வலைவீச்சு….!!

உப்பள அதிபர் வீட்டில் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனசேகர்நகர் 2-வது தெருவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் உப்பள அதிபராக இருக்கின்றார். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் சிவகாசிக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மீண்டும் செந்தில்குமார் வீட்டிற்கு வந்தபோது பீரோவில் இருந்த கம்மல், வளையல், வெள்ளி குத்துவிளக்கு மற்றும் பூஜை பொருட்கள் போன்றவை திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இவ்வாறு திருட்டுப் போன பொருட்களின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது மர்ம நபர் வீட்டின் மாடியில் உள்ள கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த பொருட்களை திருடிச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |