கலைபொருள் என்று நினைத்து கையெறிகுண்டை எடுத்து வந்து சமையலறையை சேதப்படுத்திய தாய் மகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த குரூஸ் (38). இவரது மகள் இசபெல்லா (8). இவர்கள் இருவரும் கடற்கரைக்கு சென்று உள்ளார்கள். அப்போது அங்கு வித்தியாசமான பொருள் ஒன்று கிடந்துள்ளது. அதைக் கண்ட இருவரும் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆர்வமிகுதியால் குரூஸ் பொருளை புகைப்படமெடுத்து பல்வேறு தொல்பொருள் ஆய்வு இணையதளங்களுக்கு அனுப்பியுள்ளார்.
அவர்கள் கூறிய பதிலால் குழப்பம் ஏற்பட, நாமே ஆராய்ந்து பார்ப்போம் என்று நினைத்த இவர்கள் அந்தப் பொருளை சூடாக இருந்த கம்பியினால் குத்தி பார்த்துள்ளனர். பொருள் மளமளவென தீ பற்றி எரிந்து உள்ளது. இதனால் அச்சம் அடைந்த மகள் வெளியில் ஓட, தாய் அந்த பொருளை எடுத்து பாத்திரம் கழுவ பயன்படுத்தப்படும் வாஷ்பேஸினில் போட்டுவிட்டு வெளியில் ஓடியுள்ளார்.
பின்னர் எறிந்துக்கொண்டிருந்த பொருள், வெடித்து சிதறியது. இதனால் சமையல் அறை முழுவதும் நாசமானது தீயணைப்புத் துறையினர் வந்து பார்த்து இப்பொருள இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட கையெறி குண்டு என தெரிவித்தனர். இந்த தகவல் கலைபொருள் என்று நினைத்து எடுத்து வந்த தாய் மகள் இருவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் என்னவென்று தெரியாத எந்தப் பொருளையும் வீட்டிற்கு எடுத்து வரப்போவதில்லை என சபதம் செய்து கொண்டனர். நல்லவேளையாக சமையலறையை தவிர வேறு எந்த பொருளோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்பது மிகப்பெரிய ஆறுதல்.