Categories
உலக செய்திகள்

‘கையில பல வித்தைய வச்சிருக்கியேபா’…. வியப்பில் ஆழ்ந்துள்ள மக்கள்…. கலக்கும் இங்கிலாந்து இளைஞர்….!!

பென்சில், கத்தி போன்ற கூர்மையான பொருள்களில் பந்தினை சுழற்ற வைத்து இளைஞர் ஒருவர் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள எஸ்செக்ஸ் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி லெப்ஃலி என்னும் இளைஞர். இவர் மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காக தன் கை விரல்களில் கூடைப்பந்தினை சூழற்றி விளையாட்டு காட்டியுள்ளார். இது நாளடைவில் கூர்மையான கத்தி, பென்சில் மற்றும் ஸ்பூன் போன்றவற்றில் பந்தினை சுழற்றி அனைவரையும் வியப்படைச் செய்துள்ளார்.

குறிப்பாக தாடியை சவரம் செய்யும் பொழுது அதில் உள்ள ரேஸரில் பந்தினை சுழலவிடுதல், சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஸ்பூனில் சுற்றிவிடுவது எழுதிக் கொண்டிருக்கும்போது பேனாவில் என்று அந்தோணியின் செயல்களால் மக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Categories

Tech |