Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எல்லாம் முடிந்துவிட்டது…. கையிருப்பில் எதுவும் இல்லை…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

வேலூரில் இதுவரையிலும் வந்த தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தி விட்டதால் தற்போது கையிருப்பில் இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் அடிப்படையில் 45 வயது மேற்பட்டவர்களுக்கு ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை போன்ற சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி மாவட்டம் முழுவதிலும் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு முதல்கட்ட தடுப்பூசியும், 60 ஆயிரம் பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு கடந்த 24-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக அரசு சார்பில் 20 ஆயிரம் கோவிசீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு சிறப்பு முகாம்களில் வைத்து செலுத்தப்பட்டது. இதனையடுத்து 2-ம் கட்டமாக 18 வயது மேற்பட்டவர்களுக்கு கடந்த 2-ஆம் தேதி 7 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்ததால் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

எனவே முதல் கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே 2-வது டோஸ் செலுத்தப்பட்டது. அதன்பின் மாவட்டத்தில் 500 தடுப்பூசிகள் கையிருப்பில் இருந்ததால் சிறப்பு முகாம்கள் மற்றும் மருத்துவமனையில் வைத்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இவ்வாறு வேலூர் மாவட்டத்திற்கு இதுவரையிலும் வந்த தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டதால் ஓரிரு நாட்களில் தடுப்பூசிகள் வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |