Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கஜா புயலால் சேதமடைந்த கோபுரம் சீரமைக்கப்படாததால் மக்கள் பாதிப்பு…!!

நாகை மாவட்டம்  திருப்பூண்டி  அருகே  கஜா புயலால் சேதம் மடைந்த பிஎஸ்என்எல் கோபுரம் மீண்டும் அமைக்கப்படாததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூண்டி அடுத்த கீழையூர் ஒன்றியத்தை சுற்றி ஈசனூர், வெண்மனஞ்சேரி, திருவாய்மூர், வாலை கரை, மடப்புரம், கருங்கண்ணி, மீனம்ம நல்லூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளனர். இப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், காவல் நிலையம், கடலோர காவல் நிலையம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் துறை அலுவலகம் திருக்கோவில் நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவர்கள் பெரும்பாலும் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கையே  பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பிஎஸ்என்எல் கோபுரம் இதுவரை சரி செய்யப்படவில்லை. குறட்டை விட்டு தூங்கும் பிஎஸ்என்எல் அலுவலர்களால், பலர் பல்வேறு தனியார் நெட்வொர்க்களுக்கு மாறிவிட்டாலும், அரசு அலுவலகங்கள் பிஎஸ்என்எல் விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் விவரங்கள் கேட்டுப் பெற முடியவில்லை. குறிப்பாக கீழையூர் காவல் நிலைய கைபேசி எண்கள் செத்துப்போன பிஎஸ்என்எல் நெட்வொர்க் என்பதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

Categories

Tech |