நடிகை காஜல் அகர்வால் ஊசி மற்றும் நூலை வைத்து தனது மன அழுத்தத்தை போக்கி கொள்கிறார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது.இதனால் இன்னும் சில நாட்களில் ரிலீசாக இருந்த திரைப்படங்கள் ஓடிடித்தளங்களில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் புதிதாக உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் பல நடிகர், நடிகைகள் வீட்டில் இருந்து வருகின்றன. அப்படி வீட்டிலிருக்கும் அவர்கள் தங்களது மன அழுத்தத்தைப் போக்கிக்கொள்ள யோகா, பாடல் பாடுதல், தோட்டங்களைப் பராமரித்தல் உள்ளிட்ட செயல்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் ஊசி மற்றும் நூலை வைத்து கைவினைப் பொருட்களை செய்து வருகிறார்.இதனை அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
https://www.instagram.com/p/COSXTQKH5YF/?igshid=1uq25a3wjfiav