நடிகை காஜல் அகர்வால் அவரது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நடிகை காஜல் அகர்வால் ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் .தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் . மேலும் இவர் இந்தியன் 2 , ஆச்சாரியா, ஹே சினாமிகா ,மும்பை சாகா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார் . பின்னர் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார் .
இதையடுத்து இவர் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு நடித்து வருகிறார் . இந்நிலையில் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை காஜல் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் காஜல் அகர்வாலுக்கு அவரது கணவர் பூ கொடுப்பது போல வெளியாகியுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதையடுத்து நடிகை காஜலுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.