தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது நீல் என்ற ஒரு மகன் இருக்கிறார். குழந்தை பிறந்ததற்கு பிறகு நடிகை காஜல் அகர்வால் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இவர் தற்போது கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், அப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு நடிகை சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியுள்ள நிலையில் தற்போது புஷ்பா 2 படத்திற்கும் சமந்தாவை ஆடவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பட குழுவினர் அணுகியுள்ளனர்.
ஆனால் சமந்தா நடனம் ஆடுவதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நடிகை காஜல் அகர்வாலிடம் தற்போது படக்குழுவினர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புஸ்பா 2 திரைப் படத்தில் ராஷ்மிகா மந்தனா மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.