தூங்கி எழுந்தவுடன் பார்க்கத்தக்க வகைகளாக குறிப்பிடப்படும் பொருட்களை தான் நாம் இப்போது காணவிருக்கிறோம்.
இரவு, பகல் என இரண்டும் உண்டு. மனிதன் இரவில் தூங்குகிறான் பகலில் விழிக்கிறான். இது இயல்பான ஒன்று. ஆனால் பகலில் விழிக்கும் பொழுது யாரின் மீது அவனது பார்வை படுகிறதோ அந்த பொருளின் தன்மையை வைத்துதான் அன்றைய பலன்களும் அளிக்கப்படுவதாக குறிப்பிடுகின்றன.
ஒருவேளை அன்றைய நாளன்று சரியாக செல்லாவிடில் அல்லது நாம் நினைத்த காரியங்கள் தடை பட்டாலும் நாம் இந்த வாக்கியத்தை கூறுவோம். இன்று யார் முகத்தில் முழித்தேன் என்று தெரியவில்லை என்று. ஆம் அதுவும் சில சமயங்களில் சரியாகத்தான் போய்விடுகிறது.
- தன்னுடைய வலது கையை பார்க்கலாம்.
- கண்ணாடியில் முகத்தை பார்க்கலாம்.
- தன் மீது அன்பு வைத்திருப்பவர் முகம் அல்லது கணவன், மனைவி, மகன், மகள் முகங்களில் முழிக்கலாம்.
- எழுந்தவுடன் சூரியனே தரிசிக்கலாம்.
- தாமரைப்பூவை பார்க்கலாம்.
- கடல்,
- இயற்கை காட்சிகள்,
- வயல்,
- சிவலிங்கம் ராஜகோபுரம்,
- கன்றுடன் கூடிய பசுமாடு,
- பூந்தோட்டம்
இவைகளில் ஏதேனும் ஒன்றை பார்க்கும் பொழுது அன்றைய தினம் நமது மனதிற்கு இனிய நாளாக அமையும் என்பது சாஸ்திரங்கள் கூறும் நம்பிக்கையாகும். மேலும் தூங்கி எழுந்தவுடன் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நடைபயிற்சி செய்து உதய சூரியனைப் பார்த்தால் எல்லா நாளும் இனிய நாளே என்றும் குறிப்பிடுகிறார்கள்.