தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.
இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி 2021-ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி தான் சரியாக அமையவில்லை. ஆனாலும் மற்ற போட்டிகளில் சிறப்பாகவே அமைந்தது. இதில் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் கப்பா மற்றும் டிசம்பரில் நடந்த செஞ்சூரியன் என 2 வரலாற்று வெற்றிகளை விராட்கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் நேற்று புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி உள்ளனர். இதற்காக வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஆட்டம் ,பாட்டம் என உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். அதோடு வீரர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் இதனை பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.