Categories
சினிமா தமிழ் சினிமா

களைகட்டிய பிக்பாஸ் வீடு… குத்தாட்டம் போடும் போட்டியாளர்கள்… வெளியான செகண்ட் புரோமோ…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் சிறப்பு விருந்தினராக வருகை தருகின்றனர். இன்று வெளியாகி இருந்த முதல் புரோமோவில் ரேகா ,அர்ச்சனா, நிஷா ,ரமேஷ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் மகிழ்ச்சியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த போட்டியாளர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்துகின்றனர் . பின்னர் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு அனைவரும் இணைந்து ஆட்டம் போடுகின்றனர் . இதனால் இந்த வாரம் பிக் பாஸ் வீடு எந்த ஒரு சண்டையும் இன்றி மிக கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |