Categories
தேசிய செய்திகள்

களைகட்டும் ஹரித்துவாரில் கும்பமேளா…கொரோனா பரவும் ஆபத்து …நோய்த்தடுப்பு பணியில் மத்திய அரசு …!!!

ஹரித்துவாரில் கும்பமேளா நடைபெற உள்ளதால் , பக்தர்கள் லச்சக்கணக்கில் வந்து கொண்டிருப்பதால் கொரோனா  தொற்று பரவும் ஆபத்து காணப்படுகிறது .

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் நடைபெறும், கும்பமேளா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த கும்பமேளா அடுத்த மாதம்  1ம் தேதி முதல் 30ம்  தேதி  வரை  நடைபெற உள்ளது. இந்த திருவிழா உலகிலேயே நீண்ட நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவாக கருதப்படுகிறது. இதற்காக இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிலங்களில், உள்ள பக்தர்கள் ஹரித்துவாரில் குவிந்த வண்ணம் உள்ளன. கடந்த சில நாட்களாக அனைத்து மாநிலங்களிலும் குறிப்பாக வட இந்தியாவில் ,கொரோனா தொற்றின்  இரண்டாவது அலை  பரவத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஹரித்துவாருக்கு பக்தர்கள் லட்சக்கணக்கில் வர தொடங்கியுள்ளதால், கொரோனா தொற்று பரவும் நிலை அதிகளவு காணப்படுகிறது. எனவே ஹரிதுவாரில் கொரோனா  நோய்த்தடுப்பு பணிக்காக மத்திய அரசின் தேசிய கட்டுப்பாட்டு இயக்குனரான எஸ்.கே.சிங் தலைமையிலான குழுவினர் ,ஹரிதுவாரில்  ஆய்வு பணிகளை தொடங்கினர். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளரான  ராஜேஷ் பூஷன் உத்தரகாண்ட் மாநில தலைமை செயலாளருக்கு, கடிதத்தின் வாயிலாக அறிக்கை விடுத்தார் .அந்த கடிதத்தில், ஹரிதுவார் கும்பமேளாவிற்காக முகாமிட்டுள்ள சுமார் 32 லட்சம் பக்தர்களில், நாளொன்றுக்கு 10 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்படுவதாக, மத்திய மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலை மேலும் தொடர்ந்தால் கொரோனா தொற்று  கும்பமேளாவில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே  கொரோனா தொற்றிக்கான  தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், கொரோனா  பரிசோதனையானது நாளொன்றுக்கு 55 ஆயிரம், பக்தர்களை பரிசோதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பரிசோதனையின் யாருக்காவது கொரோனா  தொற்று ஏற்பட்டு இருந்தால் அவர்களையும் ,அவர்களுடன் இருந்தவர்களையும், உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் ,என்று கூறினார். குறிப்பாக பக்தர்கள் முகக்கவசம் அணிந்து ,சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்றும் ,வெளிமாநிலங்களில் இருந்து  வரும் பக்தர்களுக்கு  மாநிலத்தின் எல்லையிலேயே  கொரோனா  பரிசோதனை செய்யவேண்டும் என்றும் கூறினார்.

Categories

Tech |