Categories
மாநில செய்திகள்

“கலை பற்றி தெரியாதவங்களுக்கு கலை மாமணி விருது”…. 2 படத்தில் நடிச்சா உடனே கொடுத்திருவீங்களா….. கோர்ட் சரமாரி கேள்வி…..!!!!!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு இயல், இசை மற்றும் நாடக மன்றம் சார்பாக வருடம் தோறும் சிறந்த கலைஞர்களுக்கு கலை மாமணி விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

இதில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு கலை வளர்மதி விருதும், 36 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு கலை சுடர்மணி விருதும், 51 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு கலை நன்மணி விருது, 61 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கலைமுதுமணி விருதும் வழங்கப்படுகிறது.

இந்த விருது வழங்குவதற்கு இதுவரை எந்த வயதோ, வரம்போ மற்றும் விதிமுறைகளோ வகுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தகுதி இல்லாத நபர்களுக்கு கலை மாமணி விருது வழங்கப்பட்டுள்ளதால், தகுதியில்லாத நபர்களிடமிருந்து விருதை திரும்ப பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதிகள் ‌ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது 2021-ம் ஆண்டு வரை முந்தைய அரசால் விருது வழங்கப்பட்டது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி கலைமாமணி விருது எதன் அடிப்படையில், எவ்வாறு தேர்ந்தெடுத்து வழங்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். அதோடு கலை பற்றி தெரியாதவர் களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது என்றும் நீதிபதி வேதனை தெரிவித்தார். கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய விருதுகளை தற்போது 2 படங்களில் நடித்தவர்களுக்கு வழங்குகிறார்கள்.

தமிழகத்தில் தற்போது இயல் இசை நாடக மன்றம் முறையாக செயல்படுவது இல்லை. இதே நிலை தொடர்ந்தால் மன்றமானது கலைக்கப்படும். அதன் பிறகு கடந்த 2021-ம் ஆண்டு வழங்கப் பட்ட விருதுகள் குறித்தும், தற்போது வழங்கப்பட்டுள்ள விருதுகள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுலா மற்றும் கலைத்துறை செயலாளர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற செயலாளர், தலைவர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கின் விசாரணையை நவம்பர் 28-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

Categories

Tech |