Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

கலைமாமணி எஸ்.எம்.உமர் காலமானார்

புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்காலைச் சேர்ந்த கலைமாமணி எஸ்.எம். உமர் (95) திங்கள்கிழமை  காரைக்கால் அவரது இல்லத்தில் காலமானார்.

காரைக்காலை பூர்வீகமாகக் கொண்ட இப்ராஹிம் மரைக்காயர் மகன் எஸ்.எம். உமர்.  முதலில்  நியூட்டோன் ஸ்டூடியோவின் பங்குதாரரான,பின்னர்  எஃப். நாகூரிடம் உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்து, தனது விடாமுயற்சியால் இயக்குநர், தயாரிப்பாளர் என்ற  உயர்த்த நிலையை எட்டினார்.

அதுமட்டும் அல்ல  வியத்நாம் சென்ற அவர் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஏறத்தாழ 600 இந்திய மொழிப் படங்களை வியத்நாம் மொழியில்,  டப்பிங் செய்து வெளியிட்டார்.

இவர்  நாடகத்துறை , பத்திரிகை துறை என எதையும் விட்டுவைக்கவில்லை. இவர்  “வள்ளித் திருமணம்’ ,பவளக்கொடி’ போன்ற  பல நாடகங்கள் இயக்கி நாடகத்துறையில் தனது பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

“இளம்பிறை’, “கதம்பம்’, “குரல்’ மற்றும் “உமர் கய்யாம்’ என்ற  பத்திரிகைகளை நடத்தியுள்ளார். மேலும் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

பாரதிதாசன், அண்ணா, எம்ஜிஆர், சிவாஜி, கருணாநிதி உள்ளிட்ட  பிரபலங்கள் பலருக்கும் நெருக்கமாக இருந்தார். எஸ்.எம். உமர் பிரபல திரைப்பட விநியோகஸ்தராகவும் இருந்தவர்.

தமிழக மற்றும்  புதுச்சேரி அரசுகள்  ஆண்டுகளில் இவருக்கு கலைமாமணி விருது வழங்கின.  திரைத் துறையில்  கலைச்செல்வர் , கலைச்சுடர் விருது என 25-க்கும் மேற்பட்ட விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக வயோதிகத்தால் வீட்டிலேயே  இருந்துவந்த இவர், திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் தனது இல்லத்தில் காலமானார்.

Categories

Tech |