Categories
பல்சுவை

தோல்வியறியாக் கலைஞர் கருணாநிதி…. ஒரு சரித்திர நாயகர்…!!

அகில இந்திய அளவில் மூத்த அரசியல் தலைவரும் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கருணாநிதி பதிமூன்று முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்கு உரியவர். 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு முதன் முதலாக வெற்றி பெற்ற கருணாநிதி அதே ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி சட்ட பேரவை உறுப்பினராக பதவியேற்றார்.

1962 ஆம் ஆண்டு தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டில் சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1977 மற்றும் 1980 ஆண்டுகளில் அண்ணாநகர் தொகுதியிலும்  1980 மற்றும் 1981 ஆம் ஆண்டுகளில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தொடர் வெற்றிகளை குவித்தார். 1996, 2001 மற்றும் 2006 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தேர்தல் வெற்றியாளர் என்ற பெருமையை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டார்.

2011 மற்றும் 2016ஆம் ஆண்டு தேர்தல்களில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று வைர விழா கண்ட சட்டப்பேரவை உறுப்பினர் என்ற வரலாற்றுப் பெருமையை பெற்றுள்ளார். 1984 ஆம் ஆண்டு மேலவை உறுப்பினராக இருந்ததால் தேர்தலில் கருணாநிதி போட்டியிடவில்லை. 1990ஆம் ஆண்டு கட்சி தோல்வியை சந்தித்ததால் தனது எம்எல்ஏ பதவியை தொடர்ந்து அரை  நூற்றாண்டுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும் இரண்டாண்டுகள் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் ஐந்து முறை முதலமைச்சராகி அப்பதவியில் 18 ஆண்டுகளாக வாழ்ந்துள்ளார் கலைஞர் கருணாநிதி.

Categories

Tech |