அம்மா மக்கள் முன்னேற்ற கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கடலூர் வடக்கு மாவட்டம் விருதாச்சலம் கிழக்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், விருதாச்சலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிளை கழக நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் எதிர்வரும் 2021 ஒரு சட்டமன்ற தேர்தலில் கழக நிர்வாகிகள் செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. கே.எஸ்.கே பாலமுருகன், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு. அக்ரி.பி முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் தேகல்லுப்பட்டி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில், கரைக்கேனி பகுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தலைமை நிலைய செயலாளர் திரு.கே.கே. உமாதேவன், மாவட்ட செயலாளர் திரு. இ. மகேந்திரன் ஆகியோர் கழகப் பணிகள் குறித்தும், புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதில் எம். ஜி. ஆர் இளைஞர் அணி செயலாளர் திரு. டேவிட் அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. வி.பி. குமரேசன் தலைமையில் வள்ளியூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை தொண்டர்கள் வழங்க வேண்டும். மாண்புமிகு சின்னம்மா பிறந்தநாளின் போது ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் திரு. சி. சண்முகவேல் தலைமையில் பல்லடம் அருகே லட்சுமிமில் பகுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றுவது, கழகத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது என அறிவுறுத்தப்பட்டது. இதில் கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் திருமதி. விசாலாட்சி தெற்கு மாவட்ட செயலாளர் திருமதி. ஆர். ஜோதிமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.