Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் மோகம்… பெற்ற மகனை துன்புறுத்தி கொன்ற ராட்சசி..!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் மற்றும் கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீலகிரியை சேர்ந்த அருண் என்பவரது மனைவியான  திவ்யா என்பவர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் கோவை கோயம்பேடு பகுதியில் வசித்து வந்தார். பிள்ளைகளின் படிப்பிற்காக மிச்சர் கடையில் பணிக்கு சேர்ந்த திவ்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனராக ராஜதுரைக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் அந்த கள்ள காதல் வலுப்பெற ராஜதுரை அடிக்கடி திவ்யா வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனால் ஆறு வயது மகனான அபிஷேக்கிற்கு தாய் செய்வது தவறு என தெரியவர கள்ளக்காதலுக்கு  கருப்புக்கொடி காட்டி வந்துள்ளார். மேலும் ராஜதுரை வீட்டிற்கு வருவதை விரும்பாததால் அவ்வப்போது அழுது சண்டை போட்டுள்ளார் அபிஷேக். இதனால் திவ்யா அபிஷேக்கை அடிக்கடி அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனிடையே திடீரென அபிஷேக் மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறி ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளார் திவ்யா.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சோதித்தபோது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்து இருக்கிறது. அதில் அதிர்ச்சி என்னவென்றால் சிறுவனின் உடல் முழுவதும் பல இடங்களில் படுகாயங்களும், கம்பியால் சூடு வைத்த தழும்புகளும் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது மட்டுமல்லாமல் கோவை சாய்பாபா காலனி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு செய்த போலீசார் திவ்யாவை தேவையான விதத்தில் விசாரித்தனர். விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மகளை கொன்றதாக ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து திவ்யா மற்றும் கள்ளக்காதலனை கைது செய்தனர் காவல்துறையினர். கள்ள காதல் மோகம் கண்ணை மறைக்க தாயின் கைகளால் கண்மூட பட்ட அவலம் இந்த சிறுவனுக்கு நேர்ந்துள்ளது. தாயோ சிறையில், அண்ணன் பிணவறையில் என்ன செய்வாள்  தங்கை என்று தான் அந்த அண்ணனின் ஆத்மா சிந்திக்கும்.

Categories

Tech |