நமது மஞ்சள் மாநகரம் ஈரோட்டில் புத்தாண்டை புது பொலிவுடன் வரவேற்கவும், உங்களை குதூகலபடுத்தவும், மிக பிரம்மாண்டமாக வருகிறது நம்ம ஊர் கலக்கல் சங்கம். இந்த நிகழ்ச்சியில் உங்களை மகிழ்விக்கவும், உற்சாகப்படுத்தவும் பல நடன கலைஞர்களும், உங்கள் இதயங்களை கொள்ளை கொள்ள பல திரை பாடகர்களும் பங்கேற்க இருக்கின்றனர். கவலைகளை மறந்து, கைதட்டி, சிரிக்க நகைச்சுவை மன்னர்களும் மற்றும் நீங்கள் பார்த்து ரசித்த பல திரை நட்சத்திரங்களும் உங்களோடு புத்தாண்டை கொண்டாடுவதற்கு வருகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்களை போற்றும் விதமாக பல விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒளிந்து இருக்கும் மாணவத் திறமைகளை உலகறிய செய்ய போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட இருக்கிறது , இப்பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியை கண்டுகளிக்கவும் புத்தாண்டை ஆனந்தமாய் கொண்டாடவும் வாருங்கள். கடந்த மாதத்தில் இருந்து இது தொடர்பாக போஸ்டர்கள் பல வீதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் இதற்கான துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு, இணையதள செய்தி சேனல் வாயிலாக ப்ரமோஷன் செய்யப்பட்டது. ஆடியன்ஸ் புக் செய்ய ரிஜிஸ்ட்ரேஷன் இணையம் கொடுக்கப்பட்டுள்ளது. ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கும் வகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.