கலப்பட டீசலுடன் வந்த டேங்கர் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காய்பட்டணம் மற்றும் சின்னமுட்டம் போன்ற பகுதிகளில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு டீசலை அரசு மானிய விலையில் வழங்குகின்றது. இந்நிலையில் கலப்பட டீசலுடன் டேங்கர் லாரி ஓன்று அஞ்சு கிராமம் வழியாக வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்படி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வழியாக வந்த டேங்கர் லாரியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து 4000 லிட்டர் கலப்பட டீசலுடன் டேங்கர் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகன், மணி ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.