Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

புதிய தாலுகாவுக்கு அலுவலகம்…. 3,18,00,000 செலவில் கட்டப்படும் கட்டிடம்…. மாவட்ட ஆட்சியர் ஆய்வு….!!

கலவை தாலுகா அலுவலக கட்டுமான பணிகளை நேரில் சென்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலவையை புதிய தாலுகாவாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் தேதி அறிவித்துள்ளார். தற்போது கலவை பேரூராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் வைத்து தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால் மாம்பாக்கம் சாலையில் புதிய தாலுகா அலுவலகம் ரூபாய் 3 கோடியே 18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ் அவர்கள் புதிதாக கட்டப்பட்டு வரும் தாலுகா அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவாகப் பணியை முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். பின்னர் கலவை-வாழைபந்தல் சாலையை அகலப்படுத்தும் பணியையும்  கலவை அரசு மருத்துவமனையையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |