Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“வாக்கு எண்ணிக்கை நாள்” இவங்கள மட்டும்தான் அலோவ் பண்ணுவோம்… மாவட்ட கலெக்டரின் அறிக்கை…!!

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்லும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி வாணியம்பாடியில் இருக்கின்ற மருதர்கேசரி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெறும். இந்நிலையில் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியான பாதுகாப்புடன் அங்கு இருக்கின்றது.

இதனையடுத்து 29 மற்றும் 30 ம் தேதிகளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு  கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகுதான் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படும். எனவே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்லும் அனைவரும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதனையடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வாக்கு மையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படாது. இந்த வழிமுறைகளை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டும் என கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |