Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நிலுவையில் இருக்கும் பணிகள்…. தீவிரமாக நடைபெற்ற கூட்டம்…. ஆட்சியரின் உத்தரவு….!!

வருவாய்த்துறை நிலுவை பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அலுவலக கூட்ட அரங்கத்தில் வைத்து வருவாய்த்துறையின் மாதந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு இம்மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இந்தக் கூட்டத்தில் வருவாய்த்துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பட்டாக்கள் நிலுவை குறித்தும் மற்றும் பல துறைகளுக்கு புதிய அலுவலகம் அமைக்க இடங்கள் தேர்வு செய்து வழங்குவது நிலுவையில் இருப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து புதிய சமத்துவபுரம் அமைத்திட இடங்கள் தேர்வு செய்து வழங்குவது, தாலுகா வாரியாக சிறிய விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்து வழங்குவது, கணினி வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் வருவாய் துறையின் சான்றிதழ்கள் நிலுவை மற்றும் வருவாய்த்துறை சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் உதவித்தொகை வழங்குவது உள்ளிட்ட பல வருவாய் துறை சம்பந்தமான அனைத்து பணிகள் நிலுவை மற்றும் முன்னேற்றங்கள் குறித்து கலெக்டர் கேட்டறிந்து நிலுவைப் பணிகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |