ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வைத்து ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, 15-வது நிதி திட்டத்தின் கீழாக பணிகளை முடிப்பதில் இம்மாவட்டம் பின்தங்கி இருக்கிறது. இதில் சுகாதார மற்றும் குடிநீர் சம்பந்தமான பணிகளுக்கு இதுவரையில் பணி தேர்வு செய்து பணியானது வழங்காமல் அதிக இடங்களில் நிலுவையில் இருந்து வருகிறது.
அதன்பின் உடனடியாக பணியினைத் தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு வட்டாரத்திலும் வட்டார ஊராட்சி, மாவட்ட ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சி நிதி பயணிகளில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறோம் என்றும், ஒரு வாரத்திற்குள் பணிகள் தேர்வு செய்து பணி ஆணைகளை சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை அடுத்து ஊராட்சி ஒன்றியத்தில் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடி பணிகளின் தூய்மை செய்வது மற்றும் ஏதாவது பழுதடைந்து இருந்தால் அதை சரி செய்வதற்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
பின்னர் கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டு வருகின்ற சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், பணிகள் தரமானதாக இருப்பது அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், “ஜல் ஜீவன் மிஷன்” திட்டத்தில் இந்த மாத இலக்கினை மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து 100 சதவீத பணியினை வருகின்ற மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும், கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை இல்லாத வண்ணம் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து பணிகளும் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.