பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுயதொழில் செய்திட 11 பெண்களுக்கு தையல் எயந்திரங்களை கலெக்டர் வழங்கியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் இதன் மூலமாக பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள், கூட்டுறவு கடன் உதவி, பேரூராட்சி துறை, இலவச வீட்டு மனை பட்டா, நில பட்டா குறைகள், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு, மின்சார துறை சார்பான குறைகள், மருத்துவதுறை, கிராமப் பொது பிரச்சனைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என 325 மனுக்கள் பெறப்பட்டு இருக்கிறது.
அதன்பின் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதற்கான உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் பின் தேவையற்ற மனுக்களை நிராகரிப்பதற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த கூட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் சமூக நலத் துறையின் சார்பாக தையல் இயந்திரங்கள் வேண்டி பெண்கள் அளித்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து தலா 5,500 ரூபாய் வீதம் 100 பெண்களுக்கு 60,500 மதிப்புடைய தையல் எயந்திரங்களை அவர்களின் வாழ்வாதாரத்திற்காக சுயதொழில் செய்திட மாவட்ட கலெக்டர் வழங்கியுள்ளார்.