கலெக்டர் அலுவலகத்தில் வைத்து குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 16-ஆம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதற்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்க இருக்கிறார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரின் குடும்பத்தை சார்ந்தவர்கள் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் நகல்களுடன் நேரில் சந்தித்து குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.