Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு வேற தாங்க…. திரண்டு வந்த பொதுமக்கள்…. கலெக்டருக்கு மனு….!!

கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிக்க திரண்டு வந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள களத்துமேடு புதுநகர் பகுதியில் வசிக்கும் 100-க்கும் அதிகமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த குறைகேட்புக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்ல முயற்சி செய்த போது நுழைவு வாயிலில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி முக்கிய நிர்வாகிகள் மட்டுமே உள்ளே சென்று மனு கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்பின் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்று கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியதாவது, பண்ருட்டி நகராட்சி 28-வது வார்டு களத்துமேடு சாலையில் கடந்த 50 வருடங்களாக 299 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றோம். எங்கள் தெருவில் மின்விளக்கு, வீடுகளுக்கு மின் இணைப்பு, சிமெண்ட் சாலை, குடிநீர் வசதி என அனைத்து வசதிகளும் நகராய்ச்சி மூலமாக செய்து தரப்பட்டு இருக்கிறது. இருப்பினும் தற்போது பண்ருட்டி நகராட்சி அலுவலகத்திலிருந்து எங்கள் வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அதில் எங்களுக்கு 14 நாட்கள் அவகாசமும் அளித்துள்ளனர். பின் அவற்றில் நாங்கள் வசிக்கும் பகுதி சின்ன ஏரிக்கு உட்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து திடீரென காலி செய்ய சொல்லுவதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகிறோம். நாங்கள் அனைவருமே கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறோம். எனவே எங்களுக்கு நகராட்சி பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும், இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மனுவை பெற்ற கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |