Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

அலுவலகத்தின் முன்பாக விவசாயி ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கதவாளம் கிராமத்தில் நந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இம்மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது உடலில் தீ எரிந்த நிலையில் கலெக்டரின் அலுவலகத்திற்குள் நுழைய முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து முதியவரை தடுத்து நிறுத்தி தீயை அணைத்துள்ளனர்.

பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை சூப்பிரண்டு மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று முதியவரிடம் விசாரணை‌ செய்து உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை அடுத்து அந்த விசாரணையில் தீக்குளித்த நந்தன் அவரது சொந்த ஊரில் 3 சென்ட் நிலத்தை கோவிலுக்கு தானமாகக் கொடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. அதற்கு பதில் வேறு இடம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையால் அவரின் ஊரில் பஞ்சாயத்து பேசியதாகவும், இதில் தகராறு ஏற்பட்டதால் கிராம உதவியாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது நிலத்திற்கு உரிய மாற்று இடம் கிடைக்காத காரணத்தினால் அவர் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |