Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீங்களும் சமம்…. மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை…. கலெக்டரின் செயல்….!!

அரசு சட்ட கல்லூரி மாணவர்களுக்கு சிறந்த சட்ட மேதைகளாக விளங்க வேண்டுமென கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் கலெக்டர் கூறும் போது மகாகவி பாரதியார் இந்தியா சுதந்திரம் அடைய பல கட்ட போராட்டங்களை நடத்தி சிறைக்கு சென்று வந்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் பெண்கள் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக குரல் கொடுத்தவர்.

அதன்பின் ஆண்களுக்கு நிகர் பெண்கள் என அப்போதே பெண்ணுரிமை போற்றி பாரதி கூறிய வாக்கினை நினைவு கூறும் வண்ணம் இன்று பல துறைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சிறந்து விளங்கி வருகின்றனர். பின்னர் கொரோனா நோய் தொற்றினால் நீண்ட இடைவெளிக்குப் பின் கல்லூரிகள் திறக்கப்பட்டு சட்டக்கல்வி பயின்று வருகின்ற மாணவ-மாணவிகள் பாரதியார் கூறிய வார்த்தைகளை நினைவு கூர்ந்து பெண்களுக்கான அனைவருக்கும் தீண்டாமை, சட்டம் ஒழுங்கு, சமநீதி போன்றவைகளை நன்கு பயின்று வரும் காலங்களில் சிறந்த சட்ட மேதைகளாக விளங்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார்.

இதனையடுத்து மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதற்கு முன்பாகவே கல்லூரி வளாகத்தில் கலெக்டர் மரக்கன்றுகளை நட்டு வைத்து பாரதியாரின் பெருமைகளை எடுத்துரைக்கும் வண்ணம் மாணவர்களால் அமைக்கப்பட்டிருக்கின்ற சுவரொட்டியை பார்வையிட்டுள்ளார்.

Categories

Tech |