Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 2 லட்சம்…. புதிதாக கட்டப்படும் மையங்கள்…. கலெக்டர் ஆய்வு….!!

பூங்காவில் 2 லட்சம் மதிப்புடைய உடற்பயிற்சி கூடம் மற்றும் யோக மையம் ‌அமைக்கும் பணியை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ராஜா நகர் சிறுவர் பூங்காவில் 2 லட்ச ரூபாய் செலவில் புதிதாக உடற்பயிற்சி கூடம் மற்றும் யோகா மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது உடற்பயிற்சி கூடம் மற்றும் யோகா மையங்களில் உபகரணங்கள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். அதன்பின் அங்கிருக்கும் கழிப்பறைகளை சுத்தமாக தினமும் பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கலெக்டர் ஸ்ரீதர் துருகம் சாலையில் இருக்கும் நகராட்சி மைதானத்தில் வெளிப்புறம் அமைக்கப்பட்டு வருகின்ற பூங்கா பணிகளை ஆய்வு செய்துள்ளார். இதனை தொடர்ந்து இறுதி சடங்கு செய்ய வரும் பொதுமக்களுக்கு தேவைப்படுகின்ற தண்ணீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துமாறும், பின் மாவட்ட நகர பகுதிகளில் நடைப் பயிற்சியுடன் கூடிய பூங்காக்கள் அதிகமாக அமைக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |