Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நாங்க ஏன் பண்ண கூடாது…. விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

கலெக்டரின் அலுவலகம் முன்பாக விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழுவினர் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடையாது எனவும், நீங்கள் அனுமதி வாங்கிய இடத்தில் மட்டுமே போராட்டம் நடத்த முடியும் எனவும், அதனால் இங்கிருந்து கலைந்து செல்ல வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு அவர்கள் மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தான் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் எங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என கூறிய நிலையில் அதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்து மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகாமையில் போராட்டம் நடத்தினால் அனுமதி தருவோம் என தெரிவித்துள்ளனர். இதற்கு சம்மதம் கூறி அங்கிருந்து கலைந்து சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

Categories

Tech |