அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாணவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அலுவலக கூட்ட அரங்கத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் திட்ட உதவிகள், நிலப்பட்டா குறைகள், இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றுதல், முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, வேலைவாய்ப்பு மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய 237 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இவற்றை வாங்கிக் கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் முதுகுதண்டுவடம் பாதிப்படைந்த 6 மாற்றுத் திறனாளிகளுக்கு 13 வகையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தின் அருகாமையில் இருக்கும் அரசு கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ-மாணவிகள் 50-க்கும் அதிகமானவர்கள் கலெக்டரின் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் இந்த கல்வி ஆண்டில் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெற்றது. தற்போது அரசு நேரடியாக தேர்வு எழுத வேண்டும் என தெரிவித்திருக்கிறது. ஆனால் அது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து ஆன்லைன் மூலமாகவே தேர்வு நடத்த வேண்டும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.