மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆக மஹுவா மொய்த்ரா என்பவர் இருக்கிறார். இவர் பழங்குடியின மக்கள் கொண்டாடிய மகா பஞ்சமி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அந்த மக்களுடன் சேர்ந்து எம்.பி மஹுவா நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியின் போது எம்பி மஹுவா செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கிய காளி புகை பிடிப்பது போன்ற ஆவணப்படம் குறித்து கேட்டார். அதற்கு எம்.பி கூறியதாவது, என்னை பொறுத்தவரை காளி தெய்வம் என்பது இறைச்சி உண்ணும், மது அருந்தும் ஒரு தெய்வம். சொல்லப்போனால் இதுதான் காளியின் வடிவம். தாராபீத் கோயிலை சுற்றியுள்ள துறவிகள் எப்போதும் புகைப்பிடித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
இந்த வடிவத்தை தான் பொதுமக்களும் வழிபடுகிறார்கள். ஒரு காளியின் பக்தையாக இருக்கும் எனக்கு காளி தெய்வத்தை இறைச்சி உண்பவளாகவும், மது குடிப்பவளாகவும் கற்பனை செய்வதற்கு உரிமை இருக்கிறது. அதேபோன்று சைவ உணவு உண்பவராகவும், வெள்ளை உடை அணிந்திருப்பவராகவும் கடவுளை வணங்குவதற்கு மற்றவர்களுக்கும் உரிமை இருக்கிறது. மேலும் மதம் என்பது தனிப்பட்ட வரம்புக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த பேச்சு தற்போது சர்ச்சை ஆகியுள்ளது.
Lovely moments from Mahapanchami celebrations in Nadia pic.twitter.com/y0mkbhGGiC
— Mahua Moitra (@MahuaMoitra) September 30, 2022