14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டத்தின் இன்று தொடங்கும் முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2021 சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் போட்டியின் போது ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் மே 3-ஆம் தேதியுடன் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது .இதில்29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் தொடங்குகிறது. இங்கு துபாய் , அபுதாபி ,சார்ஜா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன .இதில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும் ,ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் நடப்பு சீசனில் நடந்த முதல் பாதி ஆட்டம் முடிவில் தரவரிசை பட்டியலில் டெல்லி கேப்பிடல் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
இதையடுத்து சிஎஸ்கே அணி 2-வது இடத்திலும் , ஆர்சிபி அணி 3-வது இடத்திலும் மற்றும் மும்பை அணி 4-வது இடத்திலும் உள்ளன. இந்த நிலையில் நடப்பு சீசனில் சென்னை – மும்பை அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது . இதனால் இன்று நடைபெறும் போட்டியில் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை அணி வெற்றியோடு தொடங்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரு பலம் வாய்ந்த அணிகள் முதல் போட்டியில் மோத இருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கபட்டுள்ளது .இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றது.
இரு அணிகளின் உத்தேச பட்டியல் :