Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி அரசு மருத்துவமனை கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் பாலதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலதாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் பாலதாசன் கழிவறைக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக கீழே வழுக்கி விழுந்து பலத்த காயமடைந்தார்.

இதனை தொடர்ந்து பாலதாசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாலதாசன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தென்பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |