கொட்டும் மழையில் கழிவு நீர் பள்ளத்தை அடைத்த குழந்தைகளை ஐபிஎஸ் அலுவலர் சைலேந்திரபாபு பாராட்டினார்.
கோயம்புத்தூரில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் போது சாலையோரமாக இருந்த கழிவுநீர் பள்ளம் நீரால் நிரம்பி வழிந்ததை அவ்வழியாக சென்ற இரண்டு சிறு குழந்தைகள் இணைந்து கட்டைகள் வைத்து அடைத்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. மாநகராட்சி செய்ய வேண்டிய இந்த பணியை இரண்டு குழந்தைகள் செய்த காட்சி மக்களிடேயே மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த வீடியோவினை ட்விட்டரில் பகிர்ந்த ஐபிஎஸ் அலுவலர் சைலேந்திரபாபு,” பொறுப்புணர்வுடன் செயல்பட்ட இந்த பிஞ்சு குழந்தைகளுக்கு தலை வணங்குவதாக” தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் ஐபிஎஸ் சைலேந்திரபாபு இரு குழந்தைகளையும் மற்றும் அவரது பெற்றோர்களையும் நேரில் அழைத்து பாராட்டினார். இது தொடர்பாக ட்விட்டரில் “ஆபத்தான கழிவுநீர் பள்ளத்தை மூடிய குழந்தைகள் தேவயானி மற்றும் அவரது சகோதரர் விக்னேஷுக்கு தீயணைப்பு துறை சார்பாக பாராட்டுகள். அவர்களாகவே இதை செய்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/SylendraBabuIPS/status/1348674747379273730