Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

8 வயது சிறுவன்… 10 அடி கழிவுநீர் தொட்டியில்… நடந்தது என்ன..?

கழிவு நீர் தொட்டியில் விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்த தம்பதியினர் ஜான்பால் – மேரி ஜாஸ்மின். ஜான்பால் அங்குள்ள  அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.  மேரி ஜாஸ்மின் எண்ணாயிரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார் . இவர்களது மகன் எட்டு வயதுடைய ரெமி எட்வின். இவன்  அங்குள்ள  தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தான். நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற எட்வின்  நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் பதறிய அவரது பெற்றோர் எட்வினை பல இடங்களில் தேடி பார்த்தனர்.  ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று இரவு  வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் தேடி பார்த்துள்ளனர். அங்கு தரை மட்டத்திலிருந்து சுமார் 10 அடி உயரத்தில்  கட்டப்பட்டிருந்த கழிவுநீர் தொட்டியில் எட்வின்  பிணமாக கிடந்துள்ளான் . இதனை கண்டு அவனது பெற்றோர் கதறி அழுதனர்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  எட்வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |