Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கழிவு நீரை வெளியேற்றுவதற்கு அமைத்து தாங்க… பொது மக்களின் போராட்டம்… விருதுநகரில் பரபரப்பு…!!

பொதுமக்கள் இணைந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருந்ததியர் காலனி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் அந்தப் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயில் அங்கு அமைந்துள்ள தனியார் நிலத்தின் வழியாக செல்கிறது. இதனால் கழிவு நீரின் கால்வாயை நிலத்தின் உரிமையாளர்கள் அடைத்து விட்டதால் தண்ணீர் வெளியேற வழி  இல்லாமல் தங்களின் பகுதியில் தேங்கி நிற்கின்றது என்று தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு தேங்கி நின்ற கழிவு நீரை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஒன்றிணைந்து வெளியேற்றியும் தொடர்ந்து அங்கு தண்ணீர் தேங்கி நிற்கின்றது என்று தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுவதால் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றோம் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கழிவுநீரை வெளியேற்ற கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பஞ்சாயத்து அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள கழிவு நீரை வெளியேற்றுவதற்கு கால்வாய் அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

Categories

Tech |