Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்…? திடிரென ஏற்பட்ட விபத்து… தீயணைப்பு துறையினரின் போராட்டம்…!!

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கழிவு பஞ்சுகள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் காட்டன் யான் ஸ்பின்னிங் மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மில்லில் உள்ள தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது மில் வளாகத்தில் உள்ள குடோனில் கழிவு பஞ்சு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அப்போது திடீரென குடோனில்  தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கே வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அச்சமடைந்து வெளியே சென்றுள்ளனர். அதன்பின் தொழிலாளர்கள் அங்கிருந்த பஞ்சு மூட்டை மீது தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால்  கழிவுப் பஞ்சு மூட்டைகளில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பற்றி எறிந்த தீயை தண்ணீர் பாய்ச்சி அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கழிவு பஞ்சுகள் தீயில் எரிந்து நாசமானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |