Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆற்றில் கலக்கும் கழிவுநீர்….. அதிகாரிகளின் திடீர் ஆய்வு…. சப்-கலெக்டரின் எச்சரிக்கை….!!

ஆற்று தண்ணீரில் நேரடியாக வீடுகளில் இருந்து கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சப்-கலெக்டர் எச்சரித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் வண்ணாரப்பேட்டை மற்றும் குன்னூர் மைனலா ஆகிய பகுதிகளில் ஓடும் ஆறு பேருந்து நிலையப் பகுதியில் சந்தித்து பின் பவானி ஆற்றில் கலக்கின்றது. இந்நிலையில் குன்னூர் பேருந்து நிலைய பகுதியில் ஓடும் ஆற்றில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் கலக்கின்றது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் வியாபாரிகளும், பயணிகளும் பேருந்து நிலையம் வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாசடைந்த தண்ணீரை குடிக்கும் விலங்குகளின் உடலுக்கும் தீங்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனை தடுக்கும் பொருட்டு தீயணைப்பு நிலையம் அருகில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வெஸ்வரி தலைமையில் ஆற்று பகுதியில் ஆய்வு நடத்தியுள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள் ஆற்று தண்ணீரின் மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து சப்-கலெக்டர் கூறும் போது ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் எனவும், வீடுகளில் இருந்து நேரடியாக கழிவு நீரை ஆற்றில் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |