Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாலையோரத்தில் வழிந்த கழிவுநீர்…. பொதுமக்கள் போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

கழிவுநீர் கால்வாயை தூர்வாராமல் இருப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலங்குறிச்சியில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கழிவுநீர் கால்வாய் தூர் வாராமல் இருப்பதினால் அதில் செல்லும் நீர் கால்வாயில் செல்லாமல் பேருந்து நிறுத்தத்தின் வழியாக ஆண்டிமடம் செல்லும் சாலை ஓரத்தில் வழிந்து ஓடுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.

இது பற்றி புகார் அளித்தும் இதுவரை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் கோபம் அடைந்த பொதுமக்கள் பேருந்து நிறுத்தம் அருகாமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பொதுமக்கள் தமிழ்நாடு அரசு கொசு வளர்ப்பு திட்டம் மற்றும் துண்டு பிரசுரங்களை கையில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து கடைகளுக்கு முன்பு துண்டுப்பிரசுரங்களை ஒட்டி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து கழிவுநீர் கால்வாயை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதை ஏற்று கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |