கல்கி பகவான் ஆசிரமத்திற்குச் சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மாதம் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் வருமான வரித்துறை சோதனையில் ரூ. 800 கோடிக்கு மேல் முறைகேடாக சொத்து சேர்த்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த சோதனையில் ரூ.43.90 கோடி, ரூ.18 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.இந்நிலையில் கல்கி ஆசிரமத்தின் நிறுவனர் கல்கி பகவான் விசாரணைக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தற்போது ஆஜராகியுள்ளார். அவரிடம் வருமான வரித்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.