கல்குவாரி நீரில் குளிக்கச் சென்ற வாலிபர் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள மொட்டைமலையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று இருக்கின்றது. அந்த கல்குவாரியில் தண்ணீர் தேங்கி ஒரு குட்டை போன்று இருக்கின்றது. அங்கு மொட்டைமலை அருகிலுள்ள வன்னியம்பட்டியை சேர்ந்த மாரிக்கனி மற்றும் சிலர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது மாரிக்கனிக்கு திடீரென வலிப்பு வந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார் .
இதுகுறித்து வன்னியம்பட்டி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீரில் மூழ்கித் தேடி நீண்ட நேரத்திற்குப் பிறகு மாரிக்கனி இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இதனையடுத்து மாரிக்கனியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.