Categories
தற்கொலை திருப்பூர் மாவட்ட செய்திகள்

கள்ளக் காதலால் ஏற்பட்ட சோகம்… விடுதியில் கழுத்தை அறுத்து கொலை முயற்சி…!!!

திருப்பூரில் வெங்கடேஷ் என்பவர் காதலித்த பெண்ணை கழுத்தை அறுத்து விட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (27) என்பவர். அவர் திருமணமாகி தன் மனைவியைப் பிரிந்து உள்ளார். சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு எழில்மதி (21) என்னும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறிவிட்டது.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எழில்மதி திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு சென்றும் இருவரும் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு செல்போனில் பேசிய வெங்கடேசன் எழில்மதியிடம் உன்னை பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.அதற்காக நான் திருப்பூர் வருகிறேன் என்றும் கூறினார். அதற்கு காதலி சம்மதித்தார். அதன்பின் வெங்கடேஷ் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து திருப்பூருக்கு வந்தடைந்தார்.

பின்பு அவரது காதலி தங்கி வேலை பார்க்கும் நிறுவனத்தின் பக்கத்தில் ஒரு விடுதியில் அவர் தங்கினார். அதன்பின் அவர் திருப்பூர் வந்த தகவலை காதலிக்கு தெரியப்படுத்தினார். மகிழ்ச்சியடைந்த எழில்மதி காதலனை பார்ப்பதற்கு அந்த விடுதிக்கு சென்றார். அங்கு அவர்கள் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.இரவு முழுவதும் அவர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர். அதனை அடுத்து நேற்று காலை இருவரும் ஷாப்பிங் சென்றுள்ளனர்.

அப்போது வெங்கடேஷ் செல்போன் அடித்துக் கொண்டே இருந்தது. இதனால் அவர் மீது சந்தேகம் கொண்டு எழில்மதி யார் என்று கேட்டுள்ளார் .ஆனால் வெங்கடேஷ் பதில் அளிக்கவில்லை. பின்பு இருவரும் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு வந்தனர். அங்கு எழில்மதி நீ என்னை மட்டும் தான் காதலிப்பதாக கூறினாய். ஆனால் உனக்கு அடிக்கடி போன் வருகிறது. வேறு யாரிடமோ அடிக்கடி போனில் பேசிக் கொண்டே இருக்கிறாய். உன்னை நம்பி நான் ஏமாந்து விட்டேன் என்று சண்டையிட்டு உள்ளார்.

அதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் எழில் மதியின் கழுத்தை அறுத்து விட்டார். தன் கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்துகொள்வதற்கு முயற்சித்தார். அப்பொழுது அவர்களின் அரை வெகு நேரமாக திறக்கப்படாததால் அந்த விடுதியின்  ஊழியர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பாக திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |