Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஒரே சமயத்தில் 2 பேர்…. சரமாரியாக தாக்கிய கள்ளக்காதலன்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஒரே சமயத்தில் 2 கள்ளக்காதலர்கள் வீட்டிற்கு வந்ததினால் ஏற்பட்ட மோதலில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் தாழனூர் பகுதியை சேர்ந்தவர் விதவைப் பெண்ணான இந்திரா. இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இந்திரா கடந்த சில வருடங்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வாணியம்பாடி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கட்டிட மேஸ்திரி சேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதன் காரணத்தினால் சேகர் இந்திராவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகின்றது. இதனை அடுத்து சொந்த ஊருக்கு வந்த இந்திரா சீனிவாசன் என்பவரின் டிராக்டரில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளனர். இருவருக்கும் கள்ளகாதல் ஏற்பட்டதில் இரவு நேரத்தில் இந்திராவின் வீட்டிற்கு சீனிவாசன் வந்திருக்கிறார்.

அந்த சமயம் வாணியம்பாடி பகுதியில் வசிக்கும் மற்றொரு கள்ளக்காதலன் சேகர் இந்திராவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இந்திரா வீட்டில் சீனிவாசன் இருந்ததை கண்ட சேகர் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இந்திராவும் சீனிவாசனும் சேர்ந்து சேகரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கோபமடைந்த சேகர் அங்கிருந்த இரும்பு கம்பியால் சீனிவாசன் மற்றும் இந்திராவை தாக்கியுள்ளார். அதற்கு பிறகு படுகாயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கட்டிட மேஸ்திரி சேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |