Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்பத்தை அவமானப்படுத்தியதால்… கணவன் மற்றும் தந்தை செய்த செயல்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் மற்றும் தந்தை இணைந்து பெண்ணை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அத்திமேடு பகுதியில் சேர்மதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இசக்கியம்மாளுக்கும் கண்டியப்பேரி பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரன் என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனையடுத்து இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் சேர்மதுரைக்கு தெரிந்ததால் இருவரையும் கண்டித்துள்ளார். அதன்பிறகும் இருவரும் கள்ளக்காதலை விடாமல் தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் டவுன் வலுக்கோட்டை ஸ்ரீராம்நகர் பகுதியில் இருவரும் ஜோடியாக நின்றுகொண்டிருந்தனர். இதனையடுத்து ஸ்ரீராம்நகர் பகுதிக்கு வந்த சேர்மதுரை கூட்டாளிகள் அவர்கள் இருவரும் நின்று கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். அப்போது சேர்மதுரை கூட்டாளிகளை பார்த்ததும் தப்பி ஓடிய ராமச்சந்திரன், இசக்கியம்மாளை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

இதனையடுத்து இருவரும் பலத்த காயமடைந்ததால் அவர்கள் இருவரையும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இசக்கியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சேர்மதுரையையும் இசக்கியம்மாளின் தந்தையான இசக்கியையும் கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் சேர்மதுரை, இசக்கி ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் குடும்பத்தை அவமானப்படுத்திய காரணத்தால் அவர்கள் இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இந்த கொலை வழக்கில் வேறு யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |