Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி வீட்டிற்கு வந்த தொழிலாளி…. வாலிபரின் கொடூர செயல்…. திருப்பூரில் பரபரப்பு….!!

கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழிலாளியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அம்மாபாளையம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் பகுதியில் வசிக்கும் கவிதா என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கவிதாவின் மகன் தினேஷ்குமார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் கவிதாவின் வீட்டிற்கு மீண்டும் சென்றுள்ளார். இதனை தினேஷ்குமார் கடுமையாக கண்டித்ததோடு தகாத வார்த்தையில் திட்டியுள்ளார்.

இந்நிலையில் பி.என்.ரோடு பகுதியில் சதீஷ்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தினேஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷ்குமாரின் கை மற்றும் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் சதீஷ்குமார் பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் சதீஸ்குமாரை உடனடியாக மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தினேஷ்குமாரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |