உல்லாசத்துக்கு அழைத்த கள்ளகாதலனை பெண் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள வளையமாதேவி பகுதியில் கூலி தொழிலாளியான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கரிவெட்டி பகுதியில் இருக்கும் பள்ளி வளாகத்தில் வேல்முருகன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த பிரேத பரிசோதனை முடிவில் வேல்முருகன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கரிவெட்டி கிராமத்தில் வசிக்கும் சிவக்குமாரின் மனைவியான மகாலட்சுமி என்ற பெண்ணுடன் வேல்முருகனுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் மகாலட்சுமியின் வீட்டுக்கு சென்ற வேல்முருகன் அவரை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அப்போது வேல்முருகன் குடிபோதையில் இருந்ததால் மகாலட்சுமி உல்லாசத்திற்கு மறுத்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் மகாலட்சுமி திடீரென வேல்முருகனை கீழே தள்ளியுள்ளார். இதனால் தலையில் படுகாயம் ஏற்பட்டு வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி வேல்முருகனின் நண்பரான ராமச்சந்திரனை தொடர்பு கொண்டு விஷயம் வெளியே தெரியாமல் மறைக்க தனக்கு உதவி செய்தால் பணம் தருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து ராமச்சந்திரன் மகாலட்சுமியுடன் சேர்ந்து வேல்முருகனின் உடலை தூக்கிக் கொண்டு பள்ளி வளாகத்தில் வீசி விட்டு எதுவும் தெரியாதது போல் இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின் காவல்துறையினர் ராமசந்திரன் மற்றும் மகாலட்சுமியை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.